சில வகை யூகலிப்டஸ் இலைகளில் தங்கம்

Written by vinni   // October 23, 2013   //

eukஆஸ்திரேலியாவில் சில தாவரங்களில் காணப்படுகின்ற மிகச் சொற்ப அளவிலான தங்கம் அங்கு நிலத்தின் கீழ் தங்கம் இருப்பதற்கான அடையாளமாகும் என அந்த நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சில வகையிலான யூகலிப்டஸ் மரங்களின் இலைகள், தண்டுகள் மற்றும் அதன் தோல் ஆகியவற்றில் தங்க துகள்கள் இருப்பதை எக்ஸ்ரே மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.

நிலத்தின் கீழ் 30 மீட்டர் ஆழத்தில் பெருமளவில் தங்கம் புதைந்திருப்பதை இது காண்பிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

தாவரங்களை சோதனை செய்வதே, நிலத்தின் கீழ் தங்க, செப்பு, நாகம் போன்ற உலோகங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்கான இலகுவான வழி என்றும் அவர்கள் கூறியுள்ளனர்


Similar posts

Comments are closed.