போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவிடம் அமைக்கும் யோசனை வட மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைப்பு

Written by vinni   // October 23, 2013   //

vikneswaranபோரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூரும் வகையில் நினைவிடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என யாழ் சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு வடக்கு மாகாண சபையின் அனுமதியை பெறுவதற்காக அது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீஸ்கந்தராஜா ஸ்ரீரஞ்சன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் நிலைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நான் இந்த யோசனையை கொண்டு வரவில்லை. சாவகச்சேரி பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமையவே இந்த யோசனையை கொண்டு வந்தேன்.

போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூரும் உண்மையான தேவையும் அக்கறையும் சாவகச்சேரி மக்களுக்கு உள்ளது.

இதன் காரணமாக பிரதேச சபையில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் 15 பேர் ஆதரவாக வாக்களித்தனர். ஒருவர் மாத்திரமே அதனை எதிர்த்து வாக்களித்தார் என்றார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நினைவிடம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டிய தேவை சாவகச்சேரி மக்களுக்கு மட்டுமல்ல கிளிநொச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்கும் இருக்கின்றது.

அப்படியான நினைவிடம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது.

போரில் உயி்ரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவிடம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த எண்ணியுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.