கடலாமை முட்டையிடுவது போல அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

Written by vinni   // October 23, 2013   //

eggகடல் ஆமை முட்டையிடுவது போல நாட்டின் அமைச்சர் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டு மக்களுக்கு சேவை செய்வதை விட, தமது கையாட்களை போசிப்பதே அரசாங்கத்தின் அசியமாகவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஹேரிசன் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பி.ஹேரிசன்,

சூது திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்பதோடு கெசினோவை உருவாக்கி அதன் பின் விபச்சாரத்தையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.

கெசினோவின் முலம் மீண்டும் நாட்டை பாதாளக் குழு ஆளும்.

கொழும்பில் இன்று கெசினோவை தொடங்கி, புனித நகரங்களான கண்டி, அநுராதபுரத்திலும் அரசாங்கம் அதனை பரப்பும்.

எனவே இந்த அரசாங்கத்தை மாற்றவேண்டிய தேவை வந்துள்ளது என பி.ஹேரிசன் மேலும் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.