உலகை சுற்றிவர உதவும் புதிய தொழில்நுட்பம்

Written by vinni   // October 23, 2013   //

world_view_001விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள ஆவலாக இருப்பவர்களுக்கு ஒரு களிப்பூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது தரையிலிருந்து சுமார் 100,000 அடிகள் வரை உயரமான இடங்களுக்கு சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லும் புதிய தொழில்நுட்பமான World View தொழில்நுட்பம் பற்றிய செய்தியே அதுவாகும்.

விசேடமாக உருவாக்கப்பட்ட பலூன் ஒன்றின் மூலம் இந்த திட்டம் எதிர்காலத்தில் சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் 2016ம் ஆண்டிற்கு பின்னரே இது நடைமுறைக்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இவ்வாறு ஒரு முறை பயணம் செய்வதற்கு 75,000 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.