பின்லேடனுக்காக கவிதை எழுதிய சமந்தா

Written by vinni   // October 23, 2013   //

samantha_002தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையதாக கருதப்படும் ஒயிட் விடோ சமந்தா அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் நினைவாக கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
இங்கிலாந்தில் பிறந்த சமந்தா லூத்வெய்ட்(வயது 29) இளம் வயதில் இஸ்லாத்தை தழுவினார்.

இதன் பின்னர் சர்வதேச அமைப்பான அல்கொய்தா இயக்கத்துடன் இணைந்தார்.

சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போலால் தேடப்பட்டு வரும் சமந்தா, அண்மையில் கென்யாவில் நடந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் இவர் ஒசாமா பின்லேடனுக்கு கவிதை ஒன்றை எழுதி அர்ப்பணித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஓ ஷேக் ஒசாமா என் தந்தையே,
என் சகோதரரே உங்கள் மீதான என் அன்புக்கு ஈடில்லை

ஓ ஷேக் ஒசாமா, நீங்கள் சென்றுவிட்ட நிலையில் முஸ்லிம்கள் விழித்துக் கொள்ள வேண்டும்
அவர்கள் வலிமையாக இருக்க வேண்டும்
நீங்கள் தொடங்கியதை நாங்கள் தொடர்வோம்

நாங்கள் உயிரை விடும்வரை வெற்றிக்காக போராடுவோம்
முஸ்லிம் அல்லாதவர்கள் மனதில் பயத்தை உண்டாக்க
நாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உங்கள் வாழ்க்கையே உதாரணம்

முஸ்லீம்களே நம் அன்பான ஷேக்கின் வார்த்தைகளை கேளுங்கள்
அவருடைய போராட்டமும், முயற்சியும் வீணாகிவிடக் கூடாது
அவர் தொடங்கியதை மீண்டும் தொடங்கி வெற்றியை நோக்கி செல்லுங்கள்

எங்கள் எதிரிகளுக்கு சொல்வதற்கு வார்த்தைகள் குறைவாக உள்ளன
நீங்கள் தவறானவர்களுடன் மோதுகிறீர்கள்
அல்கொய்தா முன்பை விட வலுவாக உள்ளது
அது உங்களுக்கு வெற்றி இல்லை மிஸ்டர் ஒபாமா
வீர மரணம் அடைந்த ஒசாமாவுக்கே கௌரவம் அனைத்தும்

கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் கென்யாவின் கடற்கரை நகரமான மொம்பாஸாவில் இருந்து தப்பிக்கும் முன்பு சமந்தா அழிக்க முயன்ற கம்ப்யூட்டர் மற்றும் பிளாஷ் டிரைவில் இருந்து தான் இந்த கவிதை உள்பட 2,000 பைல்களை பொலிசார் எடுத்துள்ளனர்.

மேலும் சமந்தா தனது 4 குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களும் கிடைத்துள்ளன.

இது தவிர சமந்தா தனது குழந்தைகளை தீவிரவாதிகளாக்குவது குறித்து எழுதி வைத்துள்ள டைரியும் கிடைத்துள்ளது.

தனது குழந்தைகள் போராளிகளாக விரும்புகிறார்கள் என்பதை அவர் பெருமையாக தெரிவித்துள்ளார்.

இவர் தற்போது தான்சானியா அல்லது சோமாலியாவில் தலைமறைவாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.


Similar posts

Comments are closed.