சாம்பலான ஆசாராமின் ஆசிரமம்

Written by vinni   // October 23, 2013   //

asramபாலியல் வழக்குகளில் சிக்கிய சாமியார் ஆசாராம் பாபுவின் குஜராத் ஆசிரமத்தை அவருடைய முன்னாள் ஆதரவாளர்களே தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற சாமியார் ஆசாராம் பாபுவுக்கு பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் படித்து வரும் பள்ளி மாணவி, சமீபத்தில் ஆசாராம் பாபு மீது பாலியல் புகார் அளித்ததின் பேரில் அவரை ஜோத்பூர் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத் புறநகரில் உள்ள அவரது ஆசிரமத்தில் வசித்து வரும் இளம்பெண் அவர் மீது கற்பழிப்பு புகார் அளித்துள்ளார்.

அதில், கடந்த 1997ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டுவரை ஆசாராம் தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். அத்துடன் அப்பெண்ணின் தங்கை ஆசாராமின் மகன் நாராயண் சாய் மீது பாலியல் புகார் கொடுத்தார்.

இதனடிப்படையில் நாராயண் சாய் மீதும் சூரத் பொலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் வல்சத்தில் பார்த்தி தாலுகாவில் உள்ள பரியா கிராமத்தில் ஆசாராமின் ஆசிரமம் தீவைத்து கொளுத்தப்பட்டது. அந்த ஆசிரமம் அமைக்க முன்பு தங்கள் நிலத்தை தானமாக கொடுத்தவர்களே அதனை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

இவர்கள் ஆசாராம் பாபுவின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள். பாலியல் புகார்களால் அவர் மீது அதிருப்தி அடைந்து, ஆசிரமத்தை தீவைத்து கொளுத்தியதில் ஆசிரமத்தின் ஒரு பகுதி எரிந்து சாம்பலானது.


Similar posts

Comments are closed.