கையெழுத்தானது இந்தியா- சீனா ஒப்பந்தம்

Written by vinni   // October 23, 2013   //

india_chinaagreement_003பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்து வந்த இந்திய- சீனா எல்லை ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகியுள்ளது.
சீனா சென்ற பிரதமர் மன்மோகன்சிங், அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசிய பின்னர் இந்தியா–சீனா இடையேயான எல்லை பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

பின்னர் பிரதமர் மன் மோகன்சிங்கும், சீன பிரதமர் கெஹியாங்கும் ஒருவரை ஒருவர் கை குலுக்கி கொண்டனர். அதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் நிரூபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

இதுகுறித்து சீன பிரதமர் லீகெஹியாங் கூறுகையில், பைலின் புயலின் போது வங்காள கடலில் தத்தளித்த 19 சீன பயணிகளை காப்பாற்றிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் பிரதமரானவுடன் எனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு சென்றேன்.

இந்தியாவுடன் சிறந்த நட்புறவு தொடரும் என நம்புகிறேன், எங்களது பேச்சு வார்த்தையின் போது அரசியல் உறவு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து விவாதித்தோம்.

மேலும் உயர் மட்ட அளவிலான சந்திப்புகள் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தியா– சீனா இடையே எல்லை பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது எனவும் கூறியுள்ளளார்.

பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளிடையேயான நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா– சீனா இடையே நிறுவன ரீதியிலான ராணுவ பரிமாற்றங்கள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீன பிரதமர் லீ டெல்லி வருகை தந்த போது சீன தொழிற்பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அந்த திட்டத்தை நிறைவேற்ற பரஸ்பர ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும்.

மேலும் இந்தியா வரும் சீன பயணிகளின் விசா நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்ற தகவலை பிரதமர் லீக்கு தெரிவிக்கிறேன் என்றும் அதே போன்ற நடவடிக்கையை சீனாவும் மேற்கொள்ளும் என நம்புகிறேன். இந்தியாவும், சீனாவும் நண்பர்களாக கைகோர்க்கும் வேளையில் உலகம் பாதுகாப்பாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.