மாணவர்கள் பேஸ்புக் பயன்படுத்த தடை

Written by vinni   // October 23, 2013   //

facebook-eye_2459156bபெங்களூரில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்கள் பேஸ்புக்கில் கணக்கு தொடங்க தடை விதித்துள்ளது.
கைப்பேசி பிரபலமானது போல் இப்போது இணையதள பேஸ்புக்கும் வேகமாக பரவியுள்ளது.

குறிப்பாக மாணவ–மாணவிகள், இளைஞர்கள், இளம் பெண்கள் என ஏராளமானோர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி ஒருவருக்கொருவர் நட்பு ஏற்படுத்தி பேசி வருகிறார்கள்.

ஆனால் சமீபகாலமாக சிலர் போலி பெயர்களில் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கியும், வேறொருவர் புகைப்படங்களை பயன்படுத்தி மோசடி செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க மாணவர்களின் கல்வியையும் பாதிக்கிறது. பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மாணவர்கள் பேஸ்புக்கில் மூழ்கி விடுகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்கள் பேஸ்புக்கில் கணக்கு தொடங்க தடை விதித்துள்ளது.இதில் குறிப்பாக டெல்லி பப்ளிக் ஸ்கூல், செயிண்ட் ஜான்ஸ் உயர்நிலைப்பள்ளி, வித்யா நிகேதன் பப்ளிக் ஸ்கூல் ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பேஸ்புக்கில் கணக்கு தொடங்க தடை விதித்துள்ளது.

மேலும் மாணவர்கள் அனைவரும் உடனடியாக தங்களது பேஸ்புக் கணக்குகளை அழித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து செயிண்ட் ஜான்ஸ் பள்ளி முதல்வர் பிராங்கிளின் கூறுகையில், வீடு செல்லும் மாணவர்கள் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் களைப்பு அடைந்து வருகிறார்கள். பெற்றோர்களும் அவர்களை கண்டுகொள்வதில்லை.

எனவே நீண்ட நேரம் பேஸ்புக்கில் இருப்பதால் மறுநாள் பள்ளிக்கு வரும் போது சோர்வுடன் காணப்படுகிறார்கள் என்பதால் இந்த தடையினை விதித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.