பேரனின் பெயர் சூட்டுவிழாவின் போது பெரிய பூந்தோட்டம் ஒன்றை பரிசாக வழங்க இளவரசர் சார்லஸ் முடிவு

Written by vinni   // October 23, 2013   //

4839300-3x2-940x627இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேரனும், இளவரசர் சார்லஸ்-டயானாவின் மகனுமான இளவரசர் வில்லியம்சிற்கும், அவரது மனைவி கேதரினுக்கும் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு இன்று கிறிஸ்தவ மத வழக்கப்படி பெயர் சூட்டு விழா நடைபெற உள்ளது.

தனது பேரனின் பெயர் சூட்டுவிழாவின் போது பூ தந்து வாழ்த்து தெரிவிப்பதற்கு பதிலாக குட்டி இளவரசர் ஜார்ஜுக்கு ரோமானிய நாட்டின் டிரான்சில்வேனியா குன்று பகுதியில் உள்ள பெரிய பூந்தோட்டம் ஒன்றையே பரிசாக வழங்க டயானாவின் கணவரும் இளவரசர் வில்லியம்மின் தந்தையுமான இளவரசர் சார்லஸ் முடிவு செய்துள்ளார்.

இந்த அரிய பரிசு குறித்து கருத்து தெரிவித்த இளவரசர் சார்லசின் நீண்டகால நண்பரும் டிரான்சில்வேனியா பகுதியில் உள்ள அவரது சொத்துகளை நிர்வகித்து வருபவருமான கவுண்ட் டிபோர் கல்னோக்கி கூறியாதாவது:-

பெயர் சூட்டு விழாவின் போது பூக்களை பரிசாக தந்தால் அவை வாடிப்போய் விடும். ஆனால், பூந்தோட்டங்கள் தினந்தோறும் புதுப்புது பூக்களை தந்து மணம் பரப்பும். அது மட்டுமின்றி இந்த பூந்தோட்டத்தின் மலர்கள் குட்டி இளவரசருக்கு அவரது பாட்டனார் அளித்த அன்பளிப்பு என்பதை நினைவில் கொண்டு அவற்றை இப்பகுதி மக்களும் பத்திரமாக பாதுகாப்பார்கள்

இதனால், இந்த பகுதியும் ரம்மியமாக காட்சியளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Similar posts

Comments are closed.