சிறிலங்காவில் பேரணிகள் நடத்துவது, பதாகைகளை காட்சிப்படுத்துவது, கறுப்பக்கொடிகளை பறக்கவிடுவதற்கு தடை

Written by vinni   // October 23, 2013   //

commanசிறிலங்காவில் அடுத்த மாதம் கொமன்வெல்த் மாநாடு நடக்கும் போது, கொழும்பிலும் ஏனைய இடங்களிலும், எல்லாப் பேரணிகளுக்கும் தடைவிதிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பேரணிகள் நடத்துவது, பதாகைகளை காட்சிப்படுத்துவது, கறுப்பக்கொடிகளை பறக்கவிடுவதற்கு அடுத்த மாதம் முதல் மூன்று வாரங்களுக்கும், தடைவிதிக்கப்படவுள்ளது.

50இற்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கொமன்வெல்த் மாநாட்டின் பாதுகாப்புக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் ஹரிகுப்த றோகணதீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் கொமன்வெல்த் மாநாடு நடத்தப்படுவதற்கும், இதில் உலகத் தலைவர்கள் பங்கேற்பதற்கும் மனிதஉரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், சிறிலங்காவின் மோசமான மனிதஉரிமைகள் நிலையை வெளிப்படுத்தும் போராட்டங்கள் நடத்தப்படலாம் என்பதாலேயே, பேரணிகள் மற்றும் பதாகைகள், கறுப்புக்கொடிகளுக்கு தடைவிதிக்கப்படவுள்ளது.


Similar posts

Comments are closed.