மீன் உணவு வகைகளை சாப்பிட்டு பொது மக்கள் அச்சத்தை போக்கிய ஜப்பான் பிரதமர்

Written by vinni   // October 23, 2013   //

d14cd7d1-39bf-44c4-b7cb-73b1ad283e89_S_secvpfஜப்பானில், கடந்த 2011ம் ஆண்டில் பூகம்பமும் அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் புகுஷிமா அணு மின் நிலையத்தின் அணு உலைகள் வெடித்தன. இதனால் அதில் இருந்து கதிர்வீச்சு வெளியானது. பால், குடிநீர் மற்றும் உணவு வகைகளில் அது பரவியது. எனவே, அதை சுற்றி தங்கியருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் நிபுனர்களை கொண்டு அந்த கதிர்வீச்சு வெளியாகாமல் சீரமைக்கப்பட்டது.

மீன்கள் சாப்பிட அச்சம் இருந்தும், அங்கிருந்து அவ்வப்போது கதிர்வீச்சு கசிவு ஏற்படுகிறது. அந்த அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவு நீர் கடலில் கலக்கிறது. இதனால் மீன்களிலும் கதிர்வீச்சு தாக்கி இருக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர். அது குறித்த வதந்தியும் பெருமளவில் பரவியுள்ளது. எனவே, மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை சாப்பிட மக்கள் அச்சப்படுகின்றனர்.

பொதுமக்களின் அச்சத்தை போக்கி அவர்களின் அன்றாட வாழ்க்கையில் இயல்பு நிலையை ஏற்படுத்த பிரதமர் ஜின்ஜோஅபே முடிவு செய்தார். அதற்காக அணு உலை வெடித்த புகுஷிமா பகுதியில் சமீபத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். புகுஷிமா அருகேயுள்ள சோமா நகருக்கு சென்ற அவர் ஆக்டோபஸ் உள்ளிட்ட பல மீன் உணவு வகைகளை பொதுமக்கள் முன்னிலையில் சாப்பிட்டு காட்டினார்.

புகுஷிமா பகுதியில் உள்ள மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகள் நன்றாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது என பிரசாரம் செய்தார் அதனால் பொதுமக்கள் சமாதானம் அடைந்து மீன்களை வாங்கி சென்றனர்.


Similar posts

Comments are closed.