பயங்கரவாதிகளுக்கு கல்லறை அமைக்க அனுமதிக்க முடியாது – யாழ்ப்பாண கட்டளைத் தளபதிமஹிந்த ஹத்துருசிங்க

Written by vinni   // October 23, 2013   //

hathuruபயங்கரவாதிகளுக்கு கல்லறை அமைக்க அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு நினைவுத் தூபிகள் மற்றும் கல்லறைகளை அமைப்பதற்கு உலகின் எந்தவொரு ஜனநாயக அரசாங்கமும் அனுமதியளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாய் நீதவானும் கல்வியலாளருமான வட மாகாணசபையின் முதல்வர் விக்னேஸ்வரன் இந்த விடயத்தை நன்கு அறிவார் எனத் தெரிவித்துள்ளார்.

அல் கய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கத் துருப்பினர் கொலை செய்து பசுபிக் கடற்பகுதியில் புதைத்தனர் எனவும். எந்த இடத்தில் புதைத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எவரும் கேள்விகளை எழுப்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

படையினர் பொதுமக்கள் காணிகளை பயன்படுத்தவில்லை என அவர் குறிப்பி;ட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.