இந்திய உதவிகள் தமிழர்களை முழுமையாகச் சென்றடைவதில்லை: சென்னையில் சம்பந்தன்

Written by vinni   // October 22, 2013   //

r.sampanthanஇலங்கை தமிழர்களுக்கு இந்தியா செய்யும் உதவிகள் முழுமையாக அவர்களைச் சென்றடைவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சென்னை பா.ஜ. அலுவலகத்தில் இன்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஊடக சந்திப்பில் சம்பந்தன் மேலும் கூறுகையில்,

இலங்கை தமிழர்களுக்கு இந்தியா செய்யும் உதவிகள் முழுமையாக சென்றடையவில்லை.

இலங்கை தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க இந்தியா தொடர்ந்து உதவிட வேண்டும்.

இந்த விவகாரத்தில் இலங்கை அரசு ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை.

13-வது அரசியல் சட்ட விவகாரத்தை இலங்கை அரசு முற்றிலுமாக கைவிடவில்லை.

இதில் திருத்தத்தை மாற்றும் முயற்சி முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து இந்தியா தீவிர ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

தமிழக பா.ஜ.க நிர்வாகிகளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இன்று சந்தித்துப் பேசினார்.

இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில், சென்னை வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இன்று பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

சென்னை தியாகராயர்நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ஈழத்தமிழர்களின் நலனை காக்க, உரிமையை மீட்க மத்திய அரசை வலியுறுத்த கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சித் தலைவர் சம்பந்தன், தமிழக பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Similar posts

Comments are closed.