முன்னாள் ஜனாதிபதியின் மூளையை திருடிய சகோதரர்

Written by vinni   // October 22, 2013   //

ammarikaஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜான் கென்னடியின் மூளையை அவரது தம்பி திருடிவிட்டதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 38வது ஜனாதிபதியாக கடந்த 1961ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் ஜான் எப் கென்னடி, ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்.

இவர் கடந்த 1963ம் ஆண்டு நவம்பர் 22ம் திகதி தனது மனைவி ஜாக்குலினுடன் காரில் சென்று கொண்டிருந்த போது டெக்காஸ் மாநிலம் டல்லாய் நகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக லீ ஹார்லி ஓஸ்வால்டு என்பவன் கைது செய்யப்பட்டான், அவர் இறந்த 2 நாட்களுக்கு பிறகு ஜேக்ரூபி என்பவனை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில் ஜேம்ஸ் சுவான்சன் என்பவர் கென்னடி குறித்து ‘என்ட் ஆப் டேஸ்(End Of Dates)’ என்ற பெயரில் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில், சுட்டுக் கொல்லப்பட்ட கென்னடியின் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது அவரது மூளையும் உடன் சேர்ந்து புதைக்கப்படவில்லை.

ஏனெனில் கென்னடியின் மூளையை அவரது தம்பி ராபர்ட் கென்னடி திருடி விட்டார், தற்போது அதை ஒரு கன்டெய்னரில் மறைத்து லாக்கரில் பத்திரப்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கென்னடிக்கு ஏற்பட்டிருந்த நோய் குறித்தும், அதற்காக அவர் எடுத்துக் கொண்ட மருந்து மற்றும் சிகிச்சை குறித்து உலகத்திற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று செய்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.