காங்கிரஸ் கட்சியில் குதிப்பாரா சச்சின்? காங்கிரசின் யுக்தி

Written by vinni   // October 22, 2013   //

sachinநட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சினை காங்கிரஸ் கட்சிக்கு இழுப்பதற்கு பேரம் பேசப்பட்டு வருவதாக மத்திரபிரதேச அரசியல் வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதன் படி வரும் நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் முழுமையாக ஓய்வு எடுக்கவுள்ளார்.

இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கும் மத்திய பிரதேச மாநிலத்தில் சச்சினை களம் இறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

மேலும் மத்திய பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. இங்கு எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என கருதுகிறது.

இங்கு பிரசாரத்தை துவங்கினால் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்கும், லோக்சபா தேர்தலுக்கும் சச்சின் பிரசாரம் செய்ய செல்லும் நிலை ஏற்படும்.

எனவே இதற்கென தேர்தல் கமிட்டி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜோதிராதித்யா சிந்தியா சச்சினுக்கு மிக நெருங்கிய நட்புக்குரியவராம்.

இவர் விரைவில் சச்சினிடம் பேசவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டு யூன் மாதம் விளையாட்டு துறையில் ஆற்றிய சேவைக்கு அவரை கவுரவிக்கும் வகையில் சச்சினுக்கு ராஜ்ய சபா எம்.பி.பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.