மனைவியின் அஸ்தியை ஆறு மாதங்களுக்கும் மேலாக புதைக்கக் காத்திருக்கும் இந்தியக் கணவர்

Written by vinni   // October 22, 2013   //

hqdefaultஇந்திய கிறிஸ்துவர் மரிய சூசை ஆண்ட்ரூஸ் என்பவர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஹாங்காங்கில் வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா (வபயது 51) நுரையீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் இறந்தார்.

அவரது உடலை எரியூட்டியபின் கிடைத்த அஸ்தியை புதைக்க முயன்றபோது தான் ஆண்ட்ரூசிற்குப் பிரச்சினை தோன்றியுள்ளது. கடந்த ஜூன் மாதம் அரசுக்கு சொந்தமான கல்லறைகளுக்குரிய இடத்திற்கான ஒதுக்கீடு குலுக்கல் முறையில் நடந்தது. அப்போது ஆண்ட்ரூசிற்கு வந்திருந்த கடிதம் சீன மொழியில் எழுதப்பட்டிருந்தது.

அதற்கு அவர் ஆங்கிலத்தில் எழுதி விண்ணப்பித்திருந்தார். அதனால் அவருக்கு அந்த ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இந்துக்கள் கல்லறையிலும் அவர் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர் என்பதால் இடம் கிடைக்கவில்லை.

ஹாங்காங்கில் அவர் வழிபடும் கிறிஸ்துவ ஆலயமும் கிறிஸ்துவர்களின் கல்லறைகளைக் கட்டுப்படுத்தும் சீன சர்ச் கூட்டணியில் இல்லாத காரணத்தினால் அவர்களுடைய சமூகக் கல்லறைகளிலும் புதைப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

சீனர்களுக்கான இடஒதுக்கீட்டிலும் அவருக்கு இதே காரணத்தினால் இடம் அளிக்கப்படவில்லை. 30 வருடங்களுக்கும் மேலாக அங்கேயே வாழ்ந்து விட்டதினால் அவர்களுக்கு மீண்டும் இந்தியா வரவும் விருப்பமில்லை.

சீன மொழியில் முதலில் கடிதம் அனுப்பியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ள சுற்றுப்புற சூழல் சுகாதார அலுவலகம் அடுத்து வரும் குலுக்கலில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது. சமத்துவமற்ற சட்டத்தால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுபான்மை இனத்தவரின் வழக்கறிஞர்கள் குழுவைச் சேர்ந்த அன்னி லி மண் தெரிவித்தார்.

ஹாங்காங்கில் வந்து வாழும் சிறுபான்மையினர் இறந்துபோன பின்பும் இங்கேயே புதைக்கப்படுவதற்கே விரும்புகின்றனர் என்றும் அவர் கூறினார்.


Similar posts

Comments are closed.