ஆசிரியரை சுட்டுக் கொன்று மாணவன் தற்கொலை

Written by vinni   // October 22, 2013   //

120301_iraq-teacher.photoblog600அமெரிக்காவில் கலிபோர்னியா அருகே உள்ள வடமேற்கு நிவாடாவில் ஸ்பார்கஸ் நடுநிலைப்பள்ளி உள்ளது. நேற்று அங்கு பள்ளி தினவிழா நடந்தது. அதில் பங்கேற்க மாணவர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் கூடைப்பந்து மைதானம் அருகே 7–வது வகுப்பு படிக்கும் 12 வயது மாணவன் ஒருவன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தனது நண்பர்களை சுட்டான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தனர். ஆனால், அவன் விடாமல் விரட்டி விரட்டி சுட்டான்.

அப்போது அங்கு வந்த கணித ஆசிரியர் மைக்கேல் லேண்ட் பெர்ரி (45) துப்பாக்கியால் சுட்ட மாணவனை தடுத்து நிறுத்த முயன்றார். எனவே அவரை நோக்கி அவன் சுட்டதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அதே இடத்தில் அவர் இறந்தார்.

மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் மேலும் 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் ஒருவனுக்கு தோளிலும், மற்றொருவனுக்கு அடி வயிற்றிலும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு 12 வயது இருக்கும். இவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட மாணவன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.

அவர்கள் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, துப்பாக்கி சூடு நடத்திய மாணவன் தனது பெற்றோரிடம் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்தது தெரிய வந்தது. அவன் எதற்காக துப்பாக்கியால் சுட்டான் என்ற விவரங்கள் தெரியவில்லை.

துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக நிவாடர் பகுதியில் உள்ள தொடக்க மற்றும் ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

சமீபகாலமாக அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. எனவே, துப்பாக்கி பயன்படுத்துவதற்கான சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Similar posts

Comments are closed.