பிரித்தானியவின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழ்ப் பெண்!

Written by vinni   // October 22, 2013   //

20131021-140809பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் உமா குமரன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார்.
உமா குமரனின் பெற்றோர் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரினால், லண்டனுக்கு குடிபெயர்ந்தனர்.

லண்டனில் பிறந்த உமா குமரன், ஹரோ தொகுதியில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

லண்டன் குயீன்ஸ் மேரி பல்கலைக்கழகத்தில், அரசியலில் பட்டம் பெற்ற உமா குமரன், பொதுக் கொள்கையில், முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ், ஜேர்மன் ஆகிய ஐந்து மொழிகளைப் பேசும் திறன் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.