ரஷ்யாவில் பஸ் மீது தற்கொலைப் படை பெண் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 6 பேர் பலி

Written by vinni   // October 22, 2013   //

article-2470371-18E341F200000578-708_634x339தெற்கு ரஷ்யாவின் காகாசஸ் மாகாணத்தின் வழியே சென்ற பயணிகள் பஸ் மீது தற்கொலைப் படை பெண் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.

ஒரு நிறுத்தத்தில் அந்த பஸ் நின்றபோது பஸ்சினுள் ஒரு பெண் ஏறினாள். அடுத்த சில நிமிடங்களில் மரங்கள் அடர்ந்த சாலையில் பஸ் சென்றபோது அவளது உடல் வெடித்து சிதறியதும், பயணிகள் பலர் தூக்கி வீசப்பட்டதையும் டிரைவர் சீட் அருகேயுள்ள சி.சி.டி.வி. கேமரா படம் பிடித்துள்ளது.

இந்த தாக்குதலில் 32 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த கொடூர தாக்குதலை நடத்தியது நய்டா அசியலோவா(30) என்றும், டகேஸ்தான் பகுதியை சேர்ந்தவள் என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் காகாசஸ் மாகாணத்திற்கு அருகே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் பந்தயங்களை நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் நிகழ்ந்துள்ள இந்த தற்கொலைப் படை தாக்குதல் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

முஸ்லிம்களுக்கென்று தனிநாடு வேண்டும் என்று போராடி வரும் குழுவினர் 2002-ம் ஆண்டு திரையரங்கம் மீது நடத்திய தாக்குதலில் 130 பேரும், 2010ம் ஆண்டு மாஸ்கோ விமான நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலில் 35 பேரும் பலியானது நினைவிருக்கலாம்.


Similar posts

Comments are closed.