பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்கவேண்டும் : கென்யா ,ஆபிரிக்க நாடுகளிடம் கோரிக்கை

Written by vinni   // October 22, 2013   //

commenஇலங்கையில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என்று கென்யா ஆபிரிக்க நாடுகளிடம் கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர தரப்புக்களை சுட்டிக்காட்டி கென்யாவின் தெ ஸ்டார் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

எனினும் ஏற்கனவே உகண்டா ,தான்சானியா, றுவண்டா, நைஜீரியா, தென்னாபிரிக்கா மற்றும் ஸம்பியா ஆகிய நாடுகள் இலங்கை மாநாட்டில் பங்கேற்பது  என்று முடிவெடுத்துள்ளன.

கென்யாவின் ஜனாதிபதி மற்றும் உப ஜனாதிபதிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுககு எதிர்ப்பு வெளியிடும் முகமாகவே இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொழும்பில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறும் காலத்திலேயே கென்ய ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகளும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கென்யா தமது ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்ட போதும் அதனை தடுக்கமுடியவில்லை.


Similar posts

Comments are closed.