என்கிட்ட சண்டை போடுறியா? மூக்கை கடித்து குதறிய மர்ம ஆசாமி

Written by vinni   // October 21, 2013   //

man_002ஜேர்மனியில் நபர் ஒருவர் மற்றொருவரின் மூக்கை கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் பிரெமென் நகரில் உள்ள பாரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அலைமோதியது.

இதில் உள்ளூர்வாசி ஒருவருக்கும், நார்டென்ஹாம் பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் திடீரென வாய் தகராறு ஏற்பட்டது.

இது முற்றி ஒருவரையொருவர் தாக்கி கொண்டர், இதனால் மற்றவர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்து வைத்தனர்.

இருப்பினும் ஆத்திரம் அடங்காத வாலிபர், அசந்த நேரத்தில் உள்ளூர்வாசியின் மூக்கை கடித்து கீழே துப்பிவிட்டு யாரிடமும் பிடிபடாமல் தப்பி விட்டார்.

ரத்தம் சொட்ட சொட்ட உள்ளூர்வாசியை மருத்துவமனையில் அனுமதித்த ஊழியர்கள், இதுதொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து வாலிபரை பொலிசார் தேடி வருகின்றனர்.


Similar posts

Comments are closed.