சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா

Written by vinni   // October 21, 2013   //

chinaamericaஉலக ஆயுத சந்தையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா தனக்கென ஒரு இடத்தை பிடிக்க ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி வரும் துருக்கி போன்ற நாடுகள் தற்போது சீனாவின் பக்கம் சாய ஆரம்பித்துள்ளது.

இதனால் அமெரிக்க ஆயுத வியாபாரிகள் கவலை அடைய ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணையை பல காலமாக நம்பியிருந்த துருக்கி, தற்போது சீனாவின் சீன பிரிசிஷன் மெஷினெரி எக்ஸ்போர்ட் இம்போர்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடம் நீண்ட தூர ஏவுகணையை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

ரஷ்யாவும், ஐரோப்பிய யூனியனும் தாங்கள் ஏவுகணைகளை தருவதாக கூறியும் நிராகரித்து விட்டு சீனாவிடம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாம் துருக்கி.

இதிலும் குறிப்பாக ஒப்பந்தம் போட்டிருக்கும் சீன பிரிசிஷன் நிறுவனத்திற்கு ஏற்கனவே அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இதற்கு காரணம் இந்த ஆயுதங்கள் ஈரான், சிரியா, வட கொரியாவுக்கு உதவக் கூடும் என்பதால் இந்தத் தடையை அது விதித்துள்ளது.

ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளை முறியடிக்கும் வகையில் துருக்கிக்காக இந்த ஏவுகணைகளை 3 கோடி டொலருக்கு வழங்க சீனநிறுவனம் முன்வந்துள்ளது.

முன்பெல்லாம் சீனாவின் சிறிய ரக ஆயுதங்கள்தான் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது பெரிய ரக ஆயுதங்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றையும் அது விற்பனைக்கு கொண்டு வர ஆரம்பித்துள்ளது, குறிப்பாக வளரும் நாடுகளை அது இலக்காகக் கொண்டு செயல்பட ஆரம்பித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆயுத விற்பனையில் 8வது இடத்தில் இருந்த சீனா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலக ஆயுத விற்பனையில் அமெரிக்காதான் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஒட்டுமொத்த உலக ஆயுத விற்பனையில் அதன் பங்கு மட்டும் 39 சதவிகிதமாகும்.

தற்போது சீனாவிடமிருந்து அதிக அளவிலான ஆயுதங்களை வாங்கும் நாடு பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.