அழகான குடும்பத்தை சீரழித்த குடிப்பழக்கம்

Written by vinni   // October 21, 2013   //

dringகுடிப்பழக்கத்தைக் கண்டித்த தனது மனைவியை கட்டிய நான்கே மாதத்தில் கொலை செய்துள்ளார் ஒரு வெறித்தனமான குடிகார கணவர்.
திருப்பூர் சுண்டமேடு, குப்புசாமி காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருபவர் அசோக்(28).

இவருக்கும் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த கவிதா என்ற 25 வயதுப் பெண்ணுக்கும் நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

புதுக்குடித்தனத்தை ஆரம்பிப்பதற்காக இருவரும் திருப்பூர் சென்று குடியேறினர். பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் அசோக்.

தீவிர குடிகாரரான அசோக் தினசரி குடித்து விட்டுத்தான் வீட்டுக்கே வருவார்.

இதனால் இருவருக்கும் தினசரி சண்டை ஏற்பட்டுள்ளது. ஆனால் அசோக் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் தினமும் குடித்தார்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று அசோக் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த கவிதா, எத்தனை முறை சொல்லியும் குடியை விட மறுக்கிறீர்களே என்று சண்டை பிடித்துள்ளார்.

மனைவி சத்தம் போட்டு பேசுவதை அக்கம் பக்கத்தினர் கேட்டால் தனது மானம் போய் விடுமே என்று கோபமடைந்த அசோக் வீட்டிலிருந்த ரேடியோ சத்தத்தை அதிகமாக வைத்துவிட்டு போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், வீடடில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து விட்டார்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த கவிதா பிணமானார். மனைவி இறந்ததைப் பார்த்த அசோக் இரவில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

இன்று காலையில்தான் கவிதா பிணமாகக் கிடந்தது அக்கம் பக்கத்தினருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் கவிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தலைமறைவாகி விட்ட அசோக்கை தேடி வருகின்றனர்.


Similar posts

Comments are closed.