சந்தனக்கடத்தல் வீரப்பன் கொடுத்த பரிசு: ஏட்டு நெகிழ்ச்சி

Written by vinni   // October 21, 2013   //

police_krishnamorthy_002சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதை பாராட்டி அரசு வழங்கிய மனையில் வீடு கட்டி, வீரப்பன் நினைவு நாளில் கிரகப்பிரவேசம நடத்தியிருக்கிறார் மதுரை பொலிஸ் ஏட்டு கிருஷ்ணமூர்த்தி.
மதுரை நகர் ரவுடிகள் கண்காணிப்பு குழுவில் (ஓ.ஐ.சி.யூ.) ஏட்டாக பணிபுரிகிறார் கிருஷ்ணமூர்த்தி.

இவர் 2000-05ம் ஆண்டு வரை வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர். வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அதிரடிப்படை வீரர்களுக்கு பதவி உயர்வும், வெகுமதியாக இலவச வீட்டடி மனையும் வழங்கப்பட்டது.

இதில் 45 பேருக்கு 2004ம் ஆண்டு அக்டோபர் 30ல் மதுரை ஆனையூர் ஜெ.ஜெ.நகரில் தலா ஐந்தரை சென்ட் வழங்கப்பட்டது. பலர் அந்த மனைகளை விற்றுச் செல்ல, சிலர் இன்னும் அதை பாதுகாத்து வருகின்றனர்.

அவர்களில் முதன்முறையாக கிருஷ்ணமூர்த்தி வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோகராக உள்ள விஜயகுமார் (முன்னாள் டி.ஜி.பி.) தலைமையில், அப்போது வீரப்பனை தேடினோம்.

2005 வரை அதிரடிப்படையில் இருந்த பின்னர் 2007-10 வரை வருஷநாடு மலைப்பகுதியில் நக்சலைட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டேன்.

தற்போது டி.ஐ.ஜி.யாக உள்ள செந்தாமரைகண்ணன், எஸ்.பி.க்கள் திருநாவுக்கரசு, கருப்பசாமி ஆகியோர் தலைமையிலும் பணிபுரிந்தேன்.

எங்களது பணியை பாராட்டி இந்த மனை வழங்கப்பட்டது, இதை விற்க எனக்கு மனம்வராததால் வீடு கட்டியுள்ளேன்.

மேலும் அதிரடிப்படையில் இறந்த பொலிசாருக்கு சத்தியமங்கலம் அருகே தச்சக்கரையில் வீரப்பன் மறைவு நாளான அக்டோபர் 18ல் நாங்கள் ஒன்றுக்கூடி அஞ்சலி செலுத்துவோம், ஆனால் சில ஆண்டுகளாக செல்ல முடியவில்லை என்றும் எல்லோரும் மீண்டும் சந்திப்பதற்காக அக்டோபர் 18ல் கிரகப்பிரவேசம் நடத்தினேன் எனவும் கூறியுள்ளார்.

இவரையும், அதிரடிப்படை வீரர்களையும் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா பாராட்டி பரிசு வழங்கி, குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார். அந்த குரூப் போட்டோவை கல்வெட்டில் செதுக்கி வீட்டின் முன், கிருஷ்ணமூர்த்தி வைத்திருக்கிறார்.

 


Similar posts

Comments are closed.