பாகிஸ்தானில் ரெயிலில் குண்டு வெடித்து 5 பேர் பலி: 16 பேர் காயம்

Written by vinni   // October 21, 2013   //

trainபாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டியில் இருந்து ஜப்பார் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. பாகிஸ்தான் மாகாணத்தில் கேரா முராத் ஜமாலி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது ரெயிலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

அதில் 4 பெட்டிகள் நொறுங்கி சேதம் அடைந்தன. இச்சம்பவத்தில் 5 பயணிகள் உயிரிழந்தனர். 16 பேருக்கு காயம் ஏற்பட்டது. தகவலறிந்ததும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. ரெயிலில் வைக்கப்பட்ட குண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் தீவிரவாதிகள் வெடிக்க செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Similar posts

Comments are closed.