கைதிகளால் லல்லு பிரசாத் உயிருக்கு ஆபத்து : ஜார்க்கண்ட் சிறப்பு போலீசார் எச்சரிக்கை

Written by vinni   // October 21, 2013   //

பீகார் முன்னாள் முதல்–மந்திரி லல்லு பிரசாத் யாதவுக்கு கால் நடை தீவன ஊழல் செய்ததாக 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராஞ்சி அருகில் உள்ள ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

lallu_prasadyadav_002சிறையில் மற்ற கைதிகளிடம் இருந்து லல்லு தனிமைப்படுத்தி, தனியாக வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் டி.வி. வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர லல்லு தினமும் தன் உறவினர்களையும், கட்சிக்காரர்களையும் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயிலில் சக கைதிகளால் அவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ஜார்க்கண்ட் சிறப்பு போலீசார் எச்சரித்துள்ளனர்.

உளவுத்துறை அதிகாரிகளும் லல்லு பிரசாத் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து லல்லு பிரசாத் யாதவ் அடைக்கப்பட்டுள்ள அறை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

லல்லுவை சந்திக்க வரும் அனைவரையும் முழுமையாக பரிசோதித்த பிறகு அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் லல்லுவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை குறைக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே சிறையில் லல்லுவுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்படுவதாக கூறி பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், சிறைக்குள் லல்லு அரசியல் ஆலோசனைகள் நடத்த தடை விதிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Similar posts

Comments are closed.