தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி, தமிழ் மக்களின் வெற்றியல்ல – டக்ளஸ்

Written by vinni   // October 21, 2013   //

Douglas_Devananda_3வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, தமிழ் மக்களின் வெற்றியல்ல என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஆங்கில இணையம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தை தூண்டிவிடுகிறது. இதன்காரணமாகவே அந்தக்கூட்டமைப்பால் அதிக ஆசனங்களை பெறமுடிந்தது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சிறந்த அரசியல்வாதியா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

தற்போதே அதனை பற்றிக்கூறுவது பொருந்தாது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போதுதான் அரசியலில் ஈடுபட்டுள்ளார். எனவே பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் முரண்பட்டு கொண்டு வடக்கு மாகாணசபையை கொண்டு செல்லமுடியாது.

13வது அரசியல் அமைப்பை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதில் தமது கட்சி எப்போதுமே இறுக்கமாக இருந்து வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு 13வது அரசியல் அமைப்பு திருத்தம் என்பது ஒரு குழந்தையை போன்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கில் அதிக இராணுவ பிரசன்னம் பற்றி கருத்தை வெளியிட்ட டக்ளஸ் தேவானந்தா, இராணுவம் தேசிய பாதுகாப்பை கருதியே வடக்கில் நிலைகொண்டுள்ளது. எனினும் அந்த இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக கூறினார்


Similar posts

Comments are closed.