மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் ஆயுதங்கள் மீட்பு

Written by vinni   // October 21, 2013   //

LTTE-wp3மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் இராணுவத்தினர் மறைத்து வைக்கப்பட்டிருந்த

ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .
இதன்போது ரீ .56 ரக துப்பாக்கி -10 , எஸ்.எம்.ஜி. ரக துப்பாக்கி -1 போன்றவையே உன்னிச்சை குளத்தின் காட்டுப்பகுதியில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர் .
இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகலையடுத்தே இவை மீட் ; க்கப்பட்டுள்ளதாகவும் இவை கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தவைகளாக இருக்கலாம் என்றும் மேலும் தேடுதல் பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டுவருவதாகவும் பெலிசார் தெரிவித்தனர் .
இதேவேளை , மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கிரான் பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் இருந்து கிளைமோர் வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .
கிரான் வைரவன் கோயில் வீதியைச் சேர்ந்த தங்கவேல் யோகம்மா என்பவரது வீட்டில் இருந்தே மேற்படி வெடிபொருளை ஏறாவூர் பொலிசார் மீட்டுள்ளனர் .
வீட்டிலுள்ளோர் வளவினை துப்புரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மர்மப் பொருளொன்று தென்படுவதை கண்ணுற்று பொலிசாருக்கு தகவல் வழங்கியமையையடுத்து பொலிசார் அதனை மீட்டுள்ளனர் .
கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர் .


Similar posts

Comments are closed.