பொதுநலவாய நாடுகள் மாநாட்டை கனடா புறககணிக்க கூடாது – கனடிய‌ முன்னாள் பிரதமர்

Written by vinni   // October 21, 2013   //

timthumbஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை கனடா புறககணிக்க கூடாது என்று கனடாவின் முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரொனி கோரியுள்ளார்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பிரச்சினைகள் இருக்கலாம். எனினும் அந்த பிரச்சினைகைள ஏனைய நாடுகள் இணைந்து பேசுவதன் மூலம் சரி செய்யமுடியும்.

இந்தநிலையில் கனடாவின் பிரசன்னம் கொழும்பு மாநாட்டில் அவசியம். இல்லையேல் கனடாவின் 146 வருட ஜனநாயக பண்புகளை உள்நாட்டிலும் வெளியில் உள்ள நட்பு நாடுகளுடனும் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்று பிரைன் மல்ரொனி கேள்வி எழுப்பியுள்ளார்.

53 அங்கத்துவ நாடுகளை கொண்ட பொதுநலவாய அமைப்பில் கனடா முக்கிய நாடாக உள்ளது.

உதாரணமாக 1961ம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற அன்றைய கனேடிய பிரதமர் ஜோன் டைபென்பேக்கர் தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக பிரேரணை ஒன்றை முன்வைத்து அதனை நிறைவேற்றியமையை பிரைன் மல்ரொனி சுடடிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக தென்னாபிரிக்கா பொதுநலவாய நாடுகளில் இருந்து விலகி, 1990 ஆண்டு நிறைவெறிக் கொள்கை முடிவுக்கு வந்த பின்னரே மீண்டும் பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்து கொண்டதாக பிரைன் மல்ரொனி தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.