காஷ்மீர் மாநிலத்தில் நில நடுக்கம் : மக்கள் ரோடுகளில் தஞ்சம்

Written by vinni   // October 21, 2013   //

earthquake_graphic_051709_xlargeகாஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை 1.15 மணி அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.

அப்போது நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொது மக்கள் ஏதோ விபரீதம் நடந்து விட்டது என எண்ணி பயத்தில் எழுந்தனர். அதன் பின்னர் தான் நில நடுக்கம் ஏற்பட்டது தெரிந்தது.

இதனால் பீதி அடைந்த மக்கள் குழந்தை குட்டிகளுடன் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இரவு முழுவதும் ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதற்கிடையே இப்பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நில நடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேத விவரங்கள் எதுவும் வெளியாக வில்லை.


Similar posts

Comments are closed.