பொதுநலவாய தலைவர்கள் அமர்வுகளின் போது போராட்டம் நடத்தப்படும் – பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Written by vinni   // October 21, 2013   //

Commonwealthபொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது போராட்டம் நடத்தப்படும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் மாதத்தில் போராட்டங்களை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இலவச கல்வி முறைமை நிதி ஒதுக்கீட்டு குறைப்பு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சலுகைகள் வழங்குதல், மாணவர் செயற்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறை போன்ற காரணிகளின் அடிப்படையில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் எதிர்வரும் மாதத்தில் வீதியில் இறங்கி போராட்டங்களை நடாத்தத் திட்டமிட்டள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 1000 தொழில் நிறுவனங்கள் மற்றும் 5000 பாடசாலைகளை உள்ளடக்கி போராட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஏனைய மாணவர் அமைப்புக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.