குமரன் பத்மநாதன் நடத்தி வரும் புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி – அரசாங்கம்

Written by vinni   // October 21, 2013   //

keheliyaபுலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினர் குமரன் பத்மநாதன் இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை ஓரளவு வெற்றியளித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது இடைத்தரகராக குமரன் பத்மநாதன் செயற்படுகின்றார். எனவே, நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அரசாங்கத்தின் சாட்சியாக குமரன் பத்மநாதனைப் பயன்படுத்துவதில் தவறில்லை.
பிரச்சினைகளுக்கு போர் ரீதியான தீர்வுத் திட்டம் மட்டும் உசிதமானதல்ல. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். சர்வதேச சமூகத்துடன் தெகிழ்வுத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.
குமரன் பத்மநாதனை சர்வதேச காவல்துறை கைது செய்யவில்லை. இலங்கை புலனாய்வுப் பிரிவினரே அவரை கைது செய்தனர் என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.