பாகிஸ்தான் அணியிலிருந்து யூனிஸ் கான் நீக்கம்

Written by vinni   // October 20, 2013   //

Pakistan-Cricket-Match-Fixingபங்கேற்கும் பாகிஸ்தான் அணியில் இருந்து மூத்த வீரர் யூனிஸ் கான் நீக்கப்பட்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(யு.ஏ.இ) சென்றுள்ள பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டி அக்டோபர் 30ம் திகதி சார்ஜாவில் நடக்கிறது, இத்தொடருக்கான 16 பேர் கொண்ட வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதில் மூத்த வீரர் யூனிஸ் கான் நீக்கப்பட்டார். இவர் கடைசியாக தென் ஆப்ரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் விளையாடினார்.

இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் சோயப் மாலிக், கம்ரான் அக்மல் ஆகியோருக்கும் இடம் கிடைக்கவில்லை.

டெஸ்ட் தொடருக்கு தெரிவு செய்யப்பட்ட ஜுல்பிகர் பாபர், மன்சூர், மசோத் ஆகியோர் ஒருநாள் தொடருக்கு தெரிவு செய்யப்படவில்லை.

டெஸ்ட் தொடருக்கு புறக்கணிக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் இடம் பிடித்துள்ளார். அப்ரிதி, முகமது இர்பான், ஜுனைடு கான், வாகாப் ரியாஸ், சோகைல் தன்வீர் ஆகியோர் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.

அணி விவரம்: மிஸ்பா(அணித்தலைவர்), அகமது ஷேசாத், நாசிர் ஜாம்ஷெத், முகமது ஹபீஸ், ஆசாத் ஷபிக், உமர் அக்மல், உமர் அமின், மசோத், சர்பராஸ் அகமது, அப்ரிதி, அப்துல் ரெஹ்மான், சயீத் அஜ்மல், முகமது இர்பான், ஜுனைடு கான், வாகாப் ரியாஸ், சோகைல் தன்வீர்.


Similar posts

Comments are closed.