10 மாதம் பிணத்துடன் வாழ்ந்தவர்களுக்கு மனநோயா?

Written by vinni   // October 20, 2013   //

deadbody_live_003நாகர்கோவிலில் இறந்த போன பெண்ணின் சடலத்துடன் 10 மாதங்கள் வாழ்ந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில் ராமவர்மபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணிய பிள்ளை. இவர் இறந்து விட்டார். இவரது மனைவி சரோஜினி(89). இவர்களுக்கு உமாதேவி(56) என்ற மகளும், பெருமாள், செல்வம் பிள்ளை(53) என்ற மகன்களும் உண்டு.

உமாதேவியின் கணவர் பெயர் தாணுப்பிள்ளை. இவர்களுக்கு சிவபிரசாத் (25) என்ற மகன் உள்ளார். குடும்ப தகராறு காரணமாக உமாதேவி தனது கணவரை பிரிந்து, மகன் சிவ பிரசாத்துடன் ராமவர்மபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் பெருமாளும் இறந்து போனார். இதையடுத்து சரோஜினியுடன், செல்வம் பிள்ளை, உமாதேவி, அவரது மகன் சிவ பிரசாத் ஆகியோர் மட்டுமே வசித்து வந்தனர்.

செல்வம் பிள்ளைக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டும் டிசம்பர் 3ம்திகதி , உடல் நிலை சரியில்லாமல் உமாதேவி இறந்து விட்டார்.

ஆனால் அவரது உடலை வீட்டில் இருந்தவர்கள் அடக்கம் செய்யாமல் ஒரு துணியில் நன்றாக கட்டி வீட்டின் ஒரு அறைக்குள் வைத்து பூட்டி விட்டு 10 மாதங்களாக அந்த உடலோடு வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதே தெருவை சேர்ந்த ஒரு பெண் மூலம் இந்த விடயம் வெளிஉலகத்துக்கு தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இறந்த உமாதேவியின் உடல் அழுகி, கட்டி, கட்டியாக இருந்ததால் நேற்று அவரது வீட்டிலேயே பிரேத பரிசோதனை நடந்தது.

குமரி மருத்துவக் கல்லூரி பிரேத பரிசோதனை மருத்துவர்கள் ராஜேஷ், ராஜ்முருகன் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர்.

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற பரிசோதனையின் போது கோட்டாறு பொலிசாரும் வந்திருந்தனர். பின்னர் பொலிசார் வீட்டுக்கு அருகிலேயே குழி தோண்டி உமாதேவியின் உடலை அடக்கம் செய்து விட்டு கிளம்பி சென்றனர்.

இதன் பின்னர் வீட்டை சுத்தப்படுத்தும் பணி நடந்தது. வீட்டில் இருந்த மூதாட்டி சரோஜினி, செல்வம் பிள்ளை, சிவ ராமன் மூவருக்கும் குமரி மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் சடலத்துடன் இருந்தவர்களுக்கு மனநோயா என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.