மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் பாரிஸ்

Written by vinni   // October 20, 2013   //

Indira-Gandhi-International-Airport-Delhi-Picture-3உலகிலேயே மிக மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் பாரீசின் பியூவாய்ஸ் விமான நிலையமும் இடம்பிடித்துள்ளது.
பிரான்சின் தலைநகரான பாரீசில் பியூவாய்ஸ் விமான நிலையம் அமைந்துள்ளது.

இந்த விமான நிலையமானது உலகத்திலேயே மோசமான விமான நிலையங்களில் 5வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த கணிப்பானது வாசகர்களின் வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

விமானத்தில் உள்ள வசதிகள், வாடிக்கையாளர் சேவை, விமான தூய்மை போன்றவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் பியூவாய்ஸ் விமானநிலையம் மிக மோசமான நிலையிலும், மேற்காட்டிய வசதிகள் எதுவும் சரிவர பராமரிக்கப்படாததால் மிகமோசமான விமான நிலைய பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இரண்டாம் இடத்தை இத்தாலியின் பெர்காமோ விமான நிலையம், 3வது இடத்தை கொல்கத்தாவும், 4வது இடத்தை இஸ்லாமபாத்தும் பிடித்துள்ளது.

சிறந்த விமானநிலைய பட்டியலில் சிங்கப்பூர் சாங்கி, ஹாங்காங், பிராங்பர்ட் ஹான் போன்ற விமானநிலையங்கள் பிடித்துள்ளன.


Similar posts

Comments are closed.