நன்றாக தூங்கினால் மூளை சுத்தமாகும் விஞ்ஞானிகள் தகவல்

Written by vinni   // October 20, 2013   //

man-sleepingஎப்போதும் தூங்கி கொண்டிருப்பவரை தூங்கு மூஞ்சி, சோம்பேறி என இழிவாக பேசுகிறோம். ஆனால், அதிக நேரம் தூங்குவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ரோசெஸ்டர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மைகென் நெதர்கார்டு தலைமையிலான குழுவினர் ‘மனிதர்கள் தூங்குவது ஏன்?’ என ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், நன்றாக தூங்கும் போது தான் மூளை சுத்தம் செய்யப்படுவது தெரிய வந்தது. தூங்கும் போது பெருமூளையின் தண்டு வட திரவம் மூளையை சுற்றி பீச்சி அடிக்கப்படுகிறது.

அப்போது, மூளைக்கு வெளிப்புறம் படிந்திருக்கும் மூலக்கூறுகளின் சிதைந்த பொருட்களும், நச்சு புரோன்டீன்களும் அப்புறப் படுத்தப்படுகின்றன. இதனால் உடல் நலத்திற்கு கெடுதல் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

இந்த ஆய்வுக்கு விஞ்ஞானி மைகென் நெதர்கார்டு குழுவினர் சுண்டெலிகளை பயன்படுத்தினர். அப்போது தான் இந்த விஷயம் கண்டு பிடிக்கப்பட்டது.


Similar posts

Comments are closed.