சீன அதிகாரிகள் மீது கந்தக அமில தாக்குதல்

Written by vinni   // October 20, 2013   //

acidசீனாவில் விற்பனைப் பொருட்களை சேமித்து வைப்பதற்காக சட்டவிரோதமாக கட்டப்பட்ட கிடங்கினை அழிக்க முயன்ற அதிகாரிகள் 19 பேர் அமிலம் வீசி தாக்கப்பட்டனர்.
ஃபுஜியான் மாகாணத்தில் ஷாவோ என்பவருக்கு சொந்தமான பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கு சட்ட விரோதமாக கட்டப்பட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை, அதனை அழிக்கும் முயற்சியில் நகர்ப்புற மேலாண்மை அதிகாரிகள் 19 பேர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஷாவோ திடீரென்று அவர்கள் மீது கந்தக அமிலத்தை வீசினார்.

இத்தாக்குதலில் அதிகாரிகள் 19 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து, ஷாவோ மீது வழக்கு பதிவு செய்து, பொலிஸார் அவரை கைது செய்தனர்.


Similar posts

Comments are closed.