அவுஸ்திரேலியாவில் பாரிய காட்டுத் தீ: காரணம் என்ன?

Written by vinni   // October 20, 2013   //

photo_of_eyre_peninsula_bushfireஅவுஸ்திரேலியாவின் நியூ சௌவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு இராணுவப் பயிற்சியின் போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் காரணமாக அமைந்ததாக என்பது குறித்து அந்த நாட்டு இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிராந்தியத்திலுள்ள நீல மலைத்தொடருக்கு அருகிலுள்ள இராணுவ தளத்தில் இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநாளில் குறித்த பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ தற்போது தொடர்ந்தும் பரவி வருவதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பல நாட்களாக பரவி வரும் இந்த தீ காரணமாக 200க்கும் அதிகமான வீடுகள் அழிவடைந்துள்ளன.

வெப்பமான காலநிலை காரணமாக வழமைக்கு மாறாக குறித்த காலத்திற்கு முன்னரே இவ்வாண்டு தீ பரவும் சம்பங்கள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ நீண்டநாட்கள் தொடரும் எனவும், ஆபத்தானதாக அமையும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.