பொதுநலவாய மாநாடு: பாதுகாப்பு பணிகளில் 55,000 படையினர்

Written by vinni   // October 20, 2013   //

armyவரும் நவம்பரில் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்ளும் அமைப்பு நாடுகளின் தலைவர்கள், இராஜதந்திரிகளின் பாதுகாப்புக்கென அதிநவீன உபகரணங்களுடன் சுமார் 14676 பாதுகாப்பு படையினரும், இதற்கு மேலாக அவசர தேவையின் பொருட்டு 40,000 படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த மகாநாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டுத் தலைவர்கள் அவர்களது துணைவிமார், அதிகாரிகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் 845 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் மெரிசிடிஸ் பென்ஸ் ரக கார்கள் 54 மற்றும் நிஸான் ரக கார்கள் 110 என்பனவும் அடங்குகின்றன.

இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக 200 டிபெண்டர் ரக வாகனங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இவை ஒவ்வொன்றிலும் எட்டு பாதுகாப்புப் படை வீர்ர்கள் கடமையிலிருப்பர் என்றும் அந்தச் செய்திகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளன.


Similar posts

Comments are closed.