பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளுக்காக விசேட வீதிப் போக்குவரத்து திட்டம்

Written by vinni   // October 20, 2013   //

commanபொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை முன்னிட்டு விசேட வீதிப் போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளது. அமர்வுகள் நடைபெறும் காலப்பகுதியில் சில வீதிகள் முழு அளவிலோ அல்லது பகுதி அளவிலோ மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விசேட வீதிப் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொழும்புக்கு மேலதிகமாக ஹம்பாந்தோட்டையிலும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. பிரதான அமர்வுகள் கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஏனைய நிகழ்வுகள் ஹம்பாந்தோட்டை, கண்டி, சீகிரிய உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறவுள்ளன. இதேவேளை, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


Similar posts

Comments are closed.