இலங்கை நிலைமைகள் குறித்து வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு

Written by vinni   // October 19, 2013   //

commanநூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் இலங்கை நிலைமைகள் குறித்து கண்காணிப்பு நடாத்தியுள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை முன்னிட்டு, வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
அந்தந்த நாடுகளின் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பதில் சிக்கல் கிடையாது என குறித்த புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குறித்த நாடுகளுக்கு அறிவித்துள்ளனர். மற்றுமொரு தொகுதி வெளிநாட்டுப் புலனாய்வு அதிகாரிகள் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கட்டுநாயக்க பிரதான வீதி, வெளிநாட்டுத் தலைவர்கள் தங்கும் ஹோட்டல்கள், முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட சோதனையிடப்பட உள்ளன.


Similar posts

Comments are closed.