தரவரிசைப் பட்டியல்: தொடர்ந்து தென் ஆப்ரிக்க வீரர்கள் முதலிடம்

Written by vinni   // October 19, 2013   //

south afirikaடெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது.
துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஆம்லாவும், இரண்டாம் இடத்தில் தென் ஆப்ரிக்காவின் டிவில்லியர்சும் உள்ளனர்.

மூன்றாவது இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சந்தர்பால் உள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அபுதாபி டெஸ்டில் வென்ற பாகிஸ்தானின் மிஸ்பா ஐந்து இடம் முன்னேறி, 7வது இடத்தை பிடித்தார்.

இந்தியாவின் புஜாரா ஒரு இடம் பின்தங்கி 8வது இடத்தை பிடித்தார்.

இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற சக வீரர் குர்ரம் மன்சூர் 45 இடம் முன்னேறி, 52வது இடத்தை அடைந்தார்.

மற்றொரு பாகிஸ்தான் வீரர்களான ஆசாத் ஷபிக், யூனிஸ் கான் முறையே 25, 6வது இடத்தில் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலை பொறுத்தவரை டாப்-10ல் எந்தவொரு மாற்றமும் இல்லை.

இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் தொடர்ந்து 8வது இடத்தில் உள்ளார். தவிர போலாக், ஸ்டைனுக்கு பின் 900 புள்ளிகளை எட்டிய மூன்றாவது தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமையை பிலாண்டர்(901 புள்ளி, 2வது இடம்) பெற்றார். முதலிடத்தில் சக வீரர் ஸ்டைன் நீடிக்கிறார்.

ஆல்-ரவுண்டர்களுக்கான பட்டியலில் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசைன் முதலிடம் பிடித்தார். தென் ஆப்ரிக்காவின் காலிஸ் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்திய அணியின் அஷ்வின் 3வது இடத்தில் உள்ளார்.


Similar posts

Comments are closed.