வீரப்பன் சமாதியில் அஞ்சலி: பொலிஸ் வீடியோவால் பரபரப்பு

Written by vinni   // October 19, 2013   //

veerapan_anjali_002சந்தன கடத்தல் வீரப்பனுக்கு அவரது மனைவி மற்றும் மகள் அஞ்சலி செலுத்தியதை பொலிசார் காணொளி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சந்தன கடத்தல் வீரப்பனின் 9வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி மேட்டூர் மூலக்கரை காவிரி கரையோரத்தில் உள்ள சமாதியில் அஞ்சலி செலுத்த அவரது மனைவி முத்துலட்சுமி ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பேனர்களும், சுவரொட்டிகளும் பல இடங்களில் காணப்பட்டன.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, அவரது இளைய மகள் பிரபாவதி ஆகியோர் பூஜை செய்து வழிபட்டனர்.

அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் வாழ்த்தி கோஷமிட்டதோடு, வீரப்பன் லட்சியத்தை நிறைவேற்றுவோம் என உறுதி ஏற்றுக்கொண்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வீரப்பன் நினைவு தினத்தையொட்டி அவரது சமாதிக்கு அருகில் அதிரடிப்படையினர், கியூ பிரிவு பொலிசார், தனிப்பிரிவு பொலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கூட்டத்திற்கு வந்தவர்களை காணொளியில் பதிவு செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

இதுகுறித்து வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமி கூறுகையில், ஆண்டுதோறும் அனுமதிபெற்று நினைவுநாள் நிகழ்ச்சியை நடத்தி வந்தோம்.

இந்த ஆண்டு சுவரொட்டிகள் ஒட்ட கொளத்தூர் பொலிசாரும், மேட்டூர் டிஎஸ்பியும் அனுமதிக்கவில்லை என்றும் இதற்கு எங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.