2032-ல் உலகம் அழியுமா..?

Written by vinni   // October 19, 2013   //

earth_001.w245வருகிற 2032ம் ஆண்டு உலகம் பாரிய ஆபத்தை சந்திக்க உள்ளதாக உக்ரேனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர்.
உக்ரேனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வானியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் தற்போது உலகத்தையே அச்சுறுத்தும் வகையில் தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதாவது, வருகிற 2032ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் திகதி 2500 நியூக்ளியர் குண்டுகளுக்கு இணையான சக்தி வாய்ந்த விண்கல் ஒன்று பூமியை தாக்கும் என தெரிவித்துள்ளனர்.

சுமார் 1300 அடி அகலமும், 2500 நியூக்ளியர் சக்தியுடனும் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் அவ்விண்கல் இன்னும் 19 வருடங்களில் பூமியை வந்தடையும் என்றும், இதற்கு 2013 TV135 என பெயரிட்டுள்ளனர்.

குறிப்பாக இவ்விண்கல்லானது இதுவரை பதிவாகியுள்ள விண்கல்களிளேயே இரண்டாவது மிக அபாயகரமான விண்கல்லாகும் என கடந்த வார இறுதியில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் சமூக மாநாட்டிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் அது பூமியை தாக்குவதற்கான சாத்தியகூறுகள் 63,000ல் 1 பங்குதான் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு பூமியை தாக்குமானால், அதன் பாதிப்பு ஏற்படுத்தும் சேதம் 1,00,000 சதுர மைல்கள் எனவும், பல ஆண்டுகளுக்கு புவியில் காலநிலை மாற்றத்தையும் ஏற்படுத்தும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஸ்பெயின், இத்தாலி மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை சேர்ந்த வானியல் மைய ஆராச்சியாளர்களும் 2013 TV135 என்ற விண்கல் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி 2007 VK184 என்ற விண்கல் தான் ஆபத்தான ஒன்றாக கருதப்படுகிறது.

420 அடி அகலம் கொண்ட, அக்கல்லின் தாக்கும் சாத்தியகூறுகள் 2700ல் 1 எனவும், அது பூமியை 2048ல் வந்தடையும் எனவும் மதிப்பிடப்பட்டிருந்தது.


Similar posts

Comments are closed.