எங்களுக்கு மனித உடல் வேண்டும்: மாணவர்கள்

Written by vinni   // October 19, 2013   //

human kidneys-701கர்நாடக மாநிலத்தில் மருத்துவம் பயின்று வரும் மாணவர்கள் மனித உடல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் பயின்று வரும் மருத்துவ கல்லூரியை சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை வகுப்பு மாணவர்கள் அனாடமி எனப்படும மனித உடல்களை வைத்து நடத்தப்படும் பயிற்சி வகுப்பிற்கு போதுமான உடல்கள் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.

பொதுவாக ஒரு பயிற்சி வகுப்பில் ஒரு மனித உடலை கொண்டு 10 முதல் 12 மாணவர்கள் வரையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருவது வழக்கம்.

ஆனால் தற்போது போதுமான உடல்கள் கிடைக்காமல் 24 மாணவர்களுக்கு ஒரு உடல் என்ற நிலையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதால் போதுமான விளக்கங்கள் பெற முடியாமல் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து ஜெகத்குரு ஜெயதேவ முருகராஜேந்திரா மருத்துவ கல்லூரி பேராசியர் மாவிஷெட்டர் கூறுகையில், ஆண்டு ஒன்றிற்கு குறைந்த பட்சம் 20 மனித உடல்களாவது தேவைப்படுவது வழக்கம்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுவட்டார அரசு மருத்துவமனைகளில் போதுமான மனித உடல்கள் கிடைக்காததால் மாணவர்களுக்கு தேவையான மனித உடல்கள் கோட்டயம், ஐதராபாத், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலையில் உள்ளது.

இதனால் கல்லூரி சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மனித உடல்களை தானமாக அளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம் துவக்கப்பட்டது. அதன் விளைவாக லயன்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம் உதவியுடன் ஓரளவிற்கேனும் பிரச்னைகளை சமாளிக்க முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.