ரகுராம் ராஜன் கையெழுத்தோடு வெளியாகும் 10 ரூபாய் நோட்டு

Written by vinni   // October 19, 2013   //

indian-rupees-moneyமும்பை ரிசர்வ வங்கி புதிதாக 10 ரூபாய் தாள்கனை வெளியிடவுள்ளது.
ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிடவுள்ள 10 ரூபாய் தாள்களில் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரான ரகுராம் ராஜனின் கையெழுத்து இடம் பெற உள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில், புதிதாக வெளியிடவுள்ள 10 ரூபாய் தாள்களில் ரூபாய் சின்னத்தா முன்னும் பின்னுமாகவும், மகத்மா காந்தி வரிசை 2005 படமும், ரகுராம் ராஜனின் கையெழுத்தும் இதில் அச்சடிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் அச்சிடப்படும் வருடமும் தாளின் பின்புறத்தில் குறிப்பிடப்படும் என ஆர்பிஐ தெரிவித்தது.

இந்த 10 ரூபாய் தாள்கள் 2005ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட மகத்மா காந்தி ரூபாய் நோட்டுகளை போல அச்சிடப்படும்.


Similar posts

Comments are closed.