ரஷ்ய எரிமலை சீற்றம்: மாற்று வழியில் செல்லும் விமானங்கள்

Written by vinni   // October 19, 2013   //

russian_volcanic_003ரஷ்யாவின், வடக்கு பகுதியில் பெட்ரோபாவலோவஸ்க் என்னுமிடத்திலுள்ள மிக உயரமான எரிமலை சீற்றமடைந்து, சாம்பலை உமிழ்ந்து கொண்டிருக்கிறது.
உலகின் மிகப் பெரிய, எரிமலைகளில், கிளூசெவஸ்கியும் ஒன்று.

ரஷ்ய எரிமலையான கிளூசெவஸ்கி, 15,584 அடி உயரம் கொண்டது. எரிமலையில் இருந்து, ஏறக்குறைய, 10 கி.மீ., உயரத்திற்கு எழுந்த சாம்பல், சுற்றுப்புறத்தில் ஏறக்குறைய 200 கி.மீ., தூரத்திற்கு பரவியது.

எரிமலை வெடிக்கத் துவங்கியதையடுத்து, மாற்று வழியில் விமானங்களை இயக்கும்படி, விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.