சிரியா ரசாயன ஆயுத ஒழிப்புப் பணிகள்: ஒபாமா பாராட்டு

Written by vinni   // October 19, 2013   //

america and syriyaசிரியாவிலிருந்து ரசாயன ஆயுதங்களை வெளியேற்ற ஐ.நா. எடுத்துவரும் உறுதியான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடன் வரம்பு மசோதாவை நிறைவேற்றப்பட்டு, அரசுத் துறை முடக்கம் முடிவுக்கு வந்த பின்பு, முதல் முறையாக அந்நாட்டுக்கு வியாழக்கிழமை வருகை தந்திருந்த இத்தாலிய பிரதமர் என்ரிகோ லெட்டாவை, ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார்.
பின்பு, செய்தியாளர்களிடையே அதிபர் ஒபாமா பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
சிரியாவின் ரசாயன ஆயுதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற ஐ.நா. தீர்மானம் மட்டுமல்ல, அதனைத் தொடர்ந்து அதற்காக எடுக்கப்பட்டு வரும் உறுதியான நடவடிக்கைகளும் மிகுந்த பாராட்டுக்குரியது.
சிரியாவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதில் இத்தாலி முக்கிய பங்கு வகித்து வருகிறது என்று தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.