மோடிக்காக பாதை மாறிய தமிழக முதல்வர்

Written by vinni   // October 19, 2013   //

jayalalithaமுதல்வர் ஜெயலலிதா, வழக்கமாக செல்லும் பாதையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வந்ததால் தமிழக முதல்வர் மாற்றுப்பாதையில் சென்றார்.
சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த விழாவில் பங்கேற்க, நேற்று மாலை, குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, கடற்கரை சாலை வழியாக வந்தார்.

அவர் வருவதற்கு முன் தமிழக முதல்வர் பகல் 2:00 மணிக்கு, தலைமைச் செயலகம் வந்தார்.

அவரை கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், கறிக்கோழி வளர்ப்பு நிறுவன உரிமையாளர்கள் சந்தித்து, கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கண்டதற்கு, நன்றி தெரிவித்தனர்.

இச்சூழலில், முதல்வரை, நரேந்திரமோடி சந்திக்கவுள்ளதாக, தகவல் பரவியது. ஆனால், அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. வழக்கமாக முதல்வர், தலைமைச் செயலகத்தில் இருந்து, போயஸ் கார்டனுக்கு, கடற்கரை சாலை வழியே செல்வார். மோடி அவ்வழியே வருவதாக இருந்ததால், வழியில் மோடியை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதால், முதல்வர், நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்து, கடற்கரை சாலை வழியே செல்லாமல், மவுன்ட் ரோடு வழியாக சென்றார்.


Similar posts

Comments are closed.