அனைத்து மாகாணங்களிலும் சகல வசதிகளுடனும் கூடிய பாடசாலைகள்

Written by vinni   // October 19, 2013   //

art.mahinda.rajapaksa.afp_.gi_பிரபல பாடசாலைகள் என்பதை தவிர்த்து நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களிலும், சகல வசதிகளுடனும் கூடிய பாடசாலைகளை உருவாக்குவதே அரசின் வேலைத்திட்டம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நகர்புற மாணவர்களைப் போல கிராமப்புற மாணவர்களும் தற்போது கல்வியில் முன்னேறி உலகை வெற்றி கொள்ள முன்னோக்கி வருவதையிட்டு தாம் பெருமையடைவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுளளார்.

வவுனியா மாவட்டத்தில் கடந்த புலமைப் பரிசில் பரிட்சையில், அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை இன்று (18) சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.